news Breaking News
clock

சுற்றுலாப் பயணிகளுக்காக கீழடியில் செல்பி பாயிண்ட்

சுற்றுலாப் பயணிகளுக்காக கீழடியில் செல்பி பாயிண்ட்



சிவகங்கை, பிப்.

- சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க வசதியாக “கீழடி – நம் தாய்மடி” என்ற வாசகத்துடன் தென்னங்கன்றை இணைத்து செல்பி பாயிண்ட் மையத்தை தொல்லியல் துறையினர் உருவாக்கியுள்ளனர். தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காட்சிப் பொருட்களை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக காளை புடைப்பு சிற்பம் மற்றும் சுடுமண் பானைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது பார்வையாளர்களின் விருப்பமாக உள்ளது. அதேபோல், திறந்த வெளி அருங்காட்சியகத்திலும் பார்வையாளர்கள் நினைவாக புகைப்படங்கள் எடுக்க வசதி செய்யும் வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News