news Breaking News
clock

பிப்.8- திருவாரூரில் புத்தகத் திருவிழா துவக்கம்

பிப்.8- திருவாரூரில் புத்தகத் திருவிழா துவக்கம்



திருவாரூர், பிப்.

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 4 ஆவது புத்தகக் காட்சித் திருவிழா, பிப்.8 ஆம் தேதி துவங்கி பிப்.17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே புத்தகத் திருவிழா நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் அமைந்துள்ள மங்கள் வரதர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி, நாகை மற்றும் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர்கள், திருவாரூர், நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள், தாட்கோ தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இதுதவிர, தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பேச்சாளர்கள் கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பவா செல்லதுரை, புலவர் மா.ராமலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பாவலர் அறிவுமதி, கவிதா ஜவஹர் மற்றும் புலவர் சண்முகவடிவேல் உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றுகின்றனர். மேலும், தினசரி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளும், 10-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News