சூரிய மின்சக்தி திட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா உ.பி. முன்னிலை

சூரிய மின்சக்தி திட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா உ.பி. முன்னிலை


 

புதுடெல்லி: பிரதமரின் சூர்ய இல்​லம்: இலவச மின்​சார திட்​டத்தை மத்​திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி 13-ம் தேதி அறி​முகம் செய்​தது. இந்​தத் திட்​டத்​தின் முக்​கிய நோக்​கம் வீடு​களின் கூரைகளில் சூரியசக்​தித் தகடு​களை அமைப்​ப​தன் மூலம் 300 யூனிட் வரை இலவச மின்​சா​ரம் வழங்​கு​வ​தாகும்.


ரூ.75,021 கோடி நிதி ஒதுக்​கீட்​டில் தொடங்​கப்​பட்ட இத்​திட்​டம், மார்ச் 2027-க்​குள் ஒரு கோடி வீடு​களில் சோலார் அமைப்​பு​களை நிறு​வுவதை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது. மத்​திய அரசு ஒரு வீட்​டுக்கு ரூ.78,000 வரை ஒரு​முறை நிதி​யுதவி வழங்​கு​கிறது, இந்த திட்​டத்​தின் கீழ், கடந்த 2 ஆண்​டு​களில் நாடு முழு​வதும் சுமார் 8,691 மெகா​வாட் திறன் கொண்ட 23 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ரூஃப்​டாப் சோலார் அமைப்​பு​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.


இதற்​காக அரசு ரூ.16,932.4 கோடி மானி​யம் வழங்கி உள்​ளது. இந்த திட்​டத்தை பயன்​படுத்​திக் கொண்​ட​தில் குஜ​ராத், மகா​ராஷ்டிரா மற்​றும் உத்​தரபிரதேசம் ஆகிய மாநிலங்​கள் முன்​னணி​யில் உள்​ளன. குஜ​ராத் 5.6 லட்​சத்​துடன் முதலிடத்​தி​லும், மகா​ராஷ்டிரா (4.5 லட்​சம்) 2-ம் இடத்​தி​லும் உத்​தரபிரதேசம் (3.7 லட்​சம்) 3-ம் இடத்​தி​லும் உள்​ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%