news Breaking News
clock

சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஜோதிகா, சாய் பல்லவி உள்பட 433 பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருது

சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஜோதிகா, சாய் பல்லவி உள்பட 433 பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருது

சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஜோதிகா, சாய் பல்லவி உள்பட 433 பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருது

துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


சென்னை, பிப்.–


சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஜோதிகா, சாய்பல்லவி, பார்த்திபன் உள்பட 433 பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகளை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விருதாளர்களுக்கு தலா 1 சவரன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.


‘அசுரன்’ படத்தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவுக்கும், ‘கோமாளி’ படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு விருது வழங்கப்பட்டது. கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா, லதா, எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. வெள்ளித்திரைக்கலைஞர்கள் 223 பேருக்கும், சின்னத்திரைக் கலைஞர்கள் 180 பேருக்கும், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் நட்சத்திரக் குவியலுக்கு இடையில் மிகச் சிறப்பாக நடந்தது.


கடந்த 2016 முதல் 2022 வரை 7 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரை 9 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-–2022 வரை 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.


தமிழக அரசால் சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75,000 மற்றும் சிறப்புப் பரிசாக ரூ.75,000 வழங்கப்பட்டது.


மேலும், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்துக்கு சிறப்புப் பரிசாக ரூ.1.25 லட்சம் வழங்கப்பட்டதுடன், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.


அதேபோல், சின்னத்திரை விருதுகளில் சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசு ரூ.1 லட்சம், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.


தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25,000 ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.


விழாவில் இயக்குநர்கள் எச்.வினோத், மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ், பாண்டிராஜ், நடிகர்கள் சூர்யா, கார்த்திக், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நடிகைகள் சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியார், ஊர்வசி, கே.ஆர்.விஜயா, வடிவுக்கரசி, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஆதி, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரைத்துறை யினருக்குபல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.


மூத்த நடிகைகள் கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா, லதா, நடிகர் எஸ்.வி.சேகருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. ‘கோமாளி’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிறந்த திரைப்படத் திற்கான விருது பெற்றார்.


விருது பெற்றவர்களில் சின்னத்திரைக் கலைஞர்கள் 180 பேர், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 30 பேர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News