சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம், ரூ.2¾ கோடி வெளிநாட்டு பணம் சிக்கியது
சென்னை, பிப்.-
சென்னை விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து கடத்தி வந்த ரூ.1¼கோடி தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இதைபோல ரூ.2¾கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணமும் சிக்கியது.
மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து திரும்பிய 30 வயது வாலிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரிக்கப்பட்டார். அவரின் உடைமைகளை சோதனை செய்தபோது எதுவும் கிடைக்காத நிலையில், எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்புடைய 24 காரட் தூய்மையுள்ள 940 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சென்னை விமான நிலைய வெளியே நிற்கும் 2 பேரிடம் இதை கொடுத்தால் பணம் தருவார்கள் என கூறினார். சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தல் வாலிபருடன் வெளியே வந்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் தங்கம் கடத்தல் கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில், பாதுகாப்பு சோதனையின் போது சென்னையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் பிடிபட்டார். அவரது சூட்கேஸை திறந்து பரிசோதனை செய்ததில் அடிப்பகுதியில் ரகசிய அறை அமைத்து, அதில் அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சி கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?