தமிழக, காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை

தமிழக, காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை


 

ராமேசுவரம்: தமிழக, காரைக்​கால் மீனவர்கள் 9 பேரை விடு​தலை செய்து இலங்கை நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்​பர் 28-ம் தேதி நெடுந்​தீவு அருகே பாக் நீரிணை கடற்​பகு​தி​யில், ராம​நாத​புரம் மாவட்​டம் மண்​டபம் பகு​தி​யைச் சேர்ந்த மீனவர்கள் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். அப்​போது, சந்​தியா ஜோசப் என்​பவரது விசைப்​படகை இலங்கை கடற்​படை​யினர் சுற்​றிவளைத்​தனர்.


படகில் இருந்த மீனவர்கள் அமோஸ்​டின், ஜெனி​டாஸ், ஜெபஸ்​டின் ஆகியோரைக் கைது செய்த இலங்கை கடற்​படை​யினர், அவர்​களை ஊர்க்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். பின்​னர் மீனவர்கள் யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.


மேலும், கடந்த 2-ம் தேதி காரைக்​கால் மீனவர்​களின் 2 படகு​களை சிறைபிடித்த இலங்கை கடற்​படை​யினர், 11 மீனவர்​களை கைது செய்​தனர். அவர்​களும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.


மீனவர்​களின் காவல் செவ்​வாய்க்​கிழமையோடு நிறைவடைந்​தது. தொடர்ந்து 12 மீனவர்​களும் ஊர்க்​காவல் துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி நளினி சுபாஸ்​கரன், 12 மீனவர்​களில் 9 மீனவர்​களை நிபந்​தனை​யின் அடிப்​படை​யில் விடு​தலை செய்​தார்.


ரூ.35 லட்சம் அபராதம்: மேலும், படகு​களின் ஓட்​டுநர்​களாக இருந்த 3 மீனவர்​களுக்​கும் தலா 6 மாதம் சிறை தண்​டனை மற்​றும் இந்​திய மதிப்​பில் ரூ.34 லட்​சத்து 83 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்​தரவிட்​டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%