சேலத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

சேலத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு



சேலம், பிப். 


தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பிலான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ், கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா சேலத்தில் நடைபெற்றது.


ஐந்து ரோடு பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரவிக்குமார் தலைமை தாங்கினார். சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் மற்றும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் 22 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 2,200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தொடக்க நிகழ்வாக, திட்டம்–1, திட்டம்–2 மற்றும் சேலம் ஊரகம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை–பாக்கு உள்ளிட்ட தாம்பூலங்கள் வழங்கப்பட்டதுடன், ஐந்து வகை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வட்டார அளவில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.


அரசு மருத்துவமனைகள் மூலம் பயன்பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.18,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டது. மேலும், கர்ப்ப கால முன் மற்றும் பிந்தைய பராமரிப்பு, குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், தடுப்பூசி உள்ளிட்ட விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இவ்விழா நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் இரா.சுகந்தி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%