ஞாயிறு

ஞாயிறு


நிலைமண்டில

         ஆசிரியப்பா!


கதிரவ அமைப்பில்

காணும் விண்மீன்

அதிக வெப்பம்

அழகாய்க் கொண்டதே!


காந்தப் புலத்தைக்

கண்ணாய்க் காட்டும்

ஏந்தும் ஒளியை

எழிலாய்த் தானே!


*மஞ்சள் குறுமீன்*

மாண்பாய் அழைப்பர்!

பஞ்ச மின்றிப்

பருப்பொரு ளாகும்!


*நாயிறு* என்பதே

*ஞாயிறு* ஆனதே

பாயிரம் எழுதிப்

பாங்காய்ப் போற்றலாம்!


கதிரின் வீச்சுக்

கடுமை யாகும்

உதய மாகும்

ஒளியுங் கூட!


வெப்பச் சலன

வீறு விளைவே

ஒப்பிலா ஞாயிறே

ஒண்மையாய் வாழ்கவே!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%