டாண்டலம் சுரங்கத்தில் நிலச்சரிவு காங்கோவில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலி

டாண்டலம் சுரங்கத்தில் நிலச்சரிவு காங்கோவில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலி



கின்ஷாசா,ஜன.

- காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபாயா (Rubaya) டாண்டலம் (tantalum) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ருவாண்டாவில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டுள்ள எம்23 என்ற ஆயுதக்குழுவின் ஆதரவுடன் காங்கோவில் ஏஎப்சி/எம்23 ஆயுதக்குழுக்கள் பல இடங்களை கைப்பற்றியுள்ளன. இவை அந்நாட்டின் சுரங்கங்களில் இருந்து பல்வேறு கனிமங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. அதன்படி இந்த ஆயுதக்குழுவால் நியமிக்கப்பட்ட வடக்கு கிவு மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் லுபும்பா காம்பெரே முயிசா வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ருபாயா சுரங்க விபத்து குறித்த தகவலை தெரிவித்தார். காங்கோவில் டாண்டலம் (coltan-கோல்டன்), கோபால்ட், தாமிரம், வைரங்கள், தங்கம், தகரம் மற்றும் யுரேனியம் போன்ற பல உலோக கனிம வளங்கள் நிறைந்துள்ளன. இந்த டாண்டலமானது மொபைல் போன்கள், கணினிகள், விண்வெளி பாகங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் (gas turbines) தயாரிப்பில் அதிக தேவையுள்ள முக்கிய கணிமமாக உள்ளது. உலகளவில் நடக்கும் டாண்டலம் உற்பத்தியின் மொத்த அளவில் சுமார் 15 சதவிகிதம் இந்த ருபாயா சுரங்கத்தில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. உள்ளூர் மக்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கைகளால் இந்த சுரங்கத்தை தோண்டி வேலை செய்ய வேண்டும். இந்த பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களக்கு அவர்களது தேவையை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத வகையில் சொற்ப சம்பளம் மட்டுமே வழங்கப்படும். இந்த சுரங்கமானது 2024 முதல் ஏஎப்சி/எம்23 ஆயு தக்குழுவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஜன. 28,புதன்கிழமை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள், பெண்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கிப் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சிலர் மட்டுமே மீட்கப்பட்டு பலத்த காயங்க ளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் மழைக்காலம் என்பதால் மண் நெகிழ்வாக உள்ள நிலையில் மிக மோசமான ஆபத்தான நிலச்சரிவுகள் பல சுரங்கங்களில் ஏற்பட்டு வருகின்றன. தற்போது வரை 227 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும். ருவாண்டாவில் உள்ள எம்23 ஆயுதக்குழு, தங்களின் உள்நாட்டுப்போர் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்ட ருபாயாவின் கனிம வளங்களைச் சுரண்டி வருகிறது என ஏற்கெனவே ஐ.நா அவை குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆயுதக்குழுவானது காங்கோ அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் உள்ளது. கடந்த ஆண்டு தாதுக்கள் நிறைந்த பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%