பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட பில்கேட்ஸ்: எப்ஸ்டீன் கோப்புகளில் பகீர் தகவல்
Feb 02 2026
18
அமெரிக்காவின் பெரிய அளவில் பேசும் பொருளாக ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு உள்ளது. ஜெப்ரின் எப்ஸ்டீன் என்பவர் வங்கிகளில் இருந்து பல்வேறு அரசியல்வாதிகள், அவர்களின் நிறுவனங்களுக்கு பணம் வாங்கி கொடுக்கும் பணியை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுடன் நல்ல உறவு இருந்தது. இந்நிலையில் ஜெப்ரின் எப்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து பல பிரபலங்களுக்கு தாரை வார்த்ததாக கூறப்படுகிறது. இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளர மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில்அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, ரஷியப் பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்குப் பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன. 2013-இல் எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் பில் கேட்ஸ் குறித்து இத்தகைய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இந்த குற்றச்சாட்டை பில்கேட்ஸ் தரப்பு மறுக்கிறது. பில்கேட்ஸ் பற்றி அவதூறான கருத்துகளை பரப்ப முயற்சி நடப்பதாக பில்கேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பில்கேட்ஸ் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் அபத்தமானவை, முற்றிலும் பொய்யானவை” என்று தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?