2.196 பில்லியன் டாலர் நிதியை வழங்காமல் நெருக்கடி

2.196 பில்லியன் டாலர் நிதியை வழங்காமல் நெருக்கடி



ஐ.நா.வை முடக்கும் அமெரிக்கா!


குட்டரெஸ் வேதனை நியூயார்க், ஜன.31- தனது பங்களிப்புத் தொகை ரூ. 20 ஆயிரம் கோடியை வழங்காமல் நிறுத்தியதன் மூலம், ஐ.நா. அமைப்பையே முடக்கும் சூழ்ச்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. உலக நாடுகள் மீது வர்த்தகப் போர் நடத்திவரும் அமெரிக்கா, அண்மையில் வெனி சுலா ஜனாதிபதியை, அந்நாட்டிற்குள்ளேயே புகுந்து சிறைப்பிடித்தது; தற்போது ஈரானைத் தாக்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறது. ஏற்கெனவே, இஸ்ரேல் மூலம் பாலஸ்தீனத் தில் இன அழிப்பை நடத்தி வரும் அமெரிக்கா, உக்ரைன் - ரஷ்யா இடையேயும் சண்டையும் மூட்டி, உக்ரைன் வளங்களைக் கொள்ளையடிக் கும் வேலையை செய்து வருகிறது. இந்தப் பிரச்சனைகளில், ஐக்கிய நாடுகள் அமைப்பு தமக்கு சாதகமாக இல்லாத நிலை யில், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பை யே சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளது. அண்மையில், ஐ.நா-வுக்கு போட்டியாக `அமைதி வாரியம்’ (Board of peace)என்றொரு புதிய அமைப்பை உருவாக்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த அமைப்பிற்குத் தன் னையே தலைவர் என்றும் அறிவித்துக் கொண்டார். இந்தப் பின்னணியில் தான், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயல்பாட்டை முடக்கும் வகை யில், அவ்வமைப்பிற்கு வழங்க வேண்டிய தனது பங்களிப்புத் தொகையான 2.196 பில்லி யன் டாலரை (சுமார் ரூ. 20 ஆயிரத்து 133 கோடியே 49 லட்சம்) முடக்கி வைத்துள்ளது. இதில், கடந்த ஆண்டுகளின் நிலுவைத் தொகையான 767 மில்லியன் டாலரும் (சுமார் ரூ. 7 ஆயிரத்து 32 கோடியே 05 லட்சம்) அடங்கும். அமைதிப் படைகளுக்கும் 1.8 பில்லியன் டாலர் பாக்கி! இது தவிர, ஐ.நா-வின் அமைதி காக்கும் படைகளுக்கான தனி பட்ஜெட்டிற்கு அந்நாடு வழங்க வேண்டிய 1.8 பில்லியன் டாலரையும் (சுமார் ரூ. 16 ஆயிரத்து 502 கோடியே 86 லட்சம்) வழங்காமல் உள்ளது. இதுபோலவே, வேறு சில உறுப்பு நாடுகளும் தங்களின் கட்டாயப் பங்களிப்பை முழுமையாகவோ அல்லது சரியான நேரத்திலோ செலுத்தாததால் சர்வதேச அளவில் போர்கள், பேரிடர்கள், நோய் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஐ.நா. அவையின் அமைப்புகள் செய்து வந்த சேவைகள், உதவி நடவடிக்கைகள் தொடர்ந்து நிதி சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் உலகம் முழுவதும் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தடை உருவாகியுள்ளது. மேலும் நிவாரணத்திற்காக செய்ய வேண்டிய செலவுகளை கட்டாயம் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் நாடுகளுக்கு கடிதம்! இதனைக் குறிப்பிட்டு, உறுப்பு நாடுகள் தர வேண்டிய நிதியை தர வலியுறுத்தி, ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், அமெரிக்காவை குறிப்பிட்டுச் சொல்லாமல், அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்த வேண்டும். இல்லையெனில் நிதி ரீதியாகச் இவ்வமைப்பு சிதைந்து போகும் என்பதால், அதனைத் தடுக்க அமைப்பின் நிதி தொடர்பான விதிகளை உறுப்பு நாடுகள் முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 150-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் ஐ.நா-வுக்கான தங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தியிருந்தாலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஐ.நா அவைக்கு 1.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 14 ஆயிரத்து 669 கோடியே 21 லட்சம்) நிலுவைத் தொகை வர வேண்டியது உள்ளது. இது 2024-ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தாங்க முடியாத நெருக்கடி நிலை! “இந்த சூழல் தாங்க முடியாதது. இது அமைப்பை மிகப்பெரிய நிதி அபாயத்தில் தள்ளுகிறது” என குட்டரெஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செலவிடப்படாத நிதியை உறுப்பு நாடுகளுக்கே திரும்ப வழங்க வேண்டிய விதி இருப்பதால். தற்போது அந்த கட்டாயத்தையும் ஐ.நா. சந்தித்துள்ளது. “இல்லாத பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டிய விசித்திரமான சுழற்சியில் நாங்கள் சிக்கியுள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார். நிதி உதவி மிக வேகமாக அதிகரிக்காவிட்டால் 2025 டிசம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்ட 2026-ஆம் ஆண்டுக்கான திட்ட பட்ஜெட்டை எங்களால் முழுமையாகச் செயல்படுத்த முடியாது. மிக மோசமான சூழலில் சிக்குவோம். ஜூலை மாதத்திற்குள் வழக்கமான பட்ஜெட் பணம் தீர்ந்து விடும். ஐ.நா. அவை, நிதி ரீதியாகச் சிதையும் விளிம்பில் தள்ளப்படும்” என அந்தோணியோ குட்டரெஸ் வேதனை தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%