news Breaking News
clock

டிட்வா புயல் பாதிப்புக்கு ரூ.110 கோடி நிவாரணம் ஒதுக்கீடு

டிட்வா புயல் பாதிப்புக்கு ரூ.110 கோடி நிவாரணம் ஒதுக்கீடு



சென்னை, ஜன.- கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மொத்தம் ரூ.110 கோடியே 85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 55,681 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் 33 சத வீதத்திற்கும் மேல் சேதம் அடைந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதத்தால் 83,526 விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிவாரண விதிமுறை களின்படி, 33 சதவீதத்திற்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்தால், பருவ மழை சார்ந்த பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.8,500, பாசன பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முதலமைச்சர் தலை மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 33 சதவீதத்திற்கும் மேல் பயிர் சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும், பாசன வகையைப் பொருட்படுத்தாமல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மானி யம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக நெல் பயிருக்கு பாசனம் உள்ளதா, இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப் படும். இந்த நிவாரண திட்டத்தின்கீழ், மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.94 கோடியே 28 லட்சத்து 62 ஆயி ரத்து 889, மாநில நிதியில் இருந்து ரூ.16 கோடியே 57 லட்சத்து 28 ஆயிரத்து 539 ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மாவட்ட வாரியாக பயிர் சேதம் ஏற்பட்ட பரப்பளவு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயி கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து வழங்கப்ப டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News