நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு



சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்படும் ஒரு வழி சிறப்பு ரயிலில் கூடுத லாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு தென் மாவட்டங்களி லிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் கூட்டம் அலை மோதி வருவதை கருத்தில் கொண்டு, ஜனவரி 18 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலியிலிருந்து தாம்பரத் திற்கு ஒரு வழி சிறப்பு ரயில் (வண்டி எண் 06178) இயக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், அடுத்த சில நிமிடங்களி லேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இதனால் முன்பதிவு செய்ய முடியாத பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பயணிகளின் அதீத தேவையைக் கருத்தில் கொண்டு, இந்தச் சிறப்பு ரயிலில் கூடுதலாக இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. நெல்லையில் இருந்து ஜன.18 அன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக செல்லும் இந்த சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%