டி-20 உலகக்கோப்பை புறக்கணிப்பு வங்கதேசத்திற்கு ரூ.240 கோடி இழப்பு
Jan 28 2026
41
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைப் போன்று, அண்டை நாடான வங்கதேசத்திலும் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வன்முறையில் அந்நாட்டின் சிறு பான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த, வங்கதேச வீரர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதனால் இந்தியா - வங்கதேச கிரிக்கெட் வாரி யங்களுக்கு இடையே மோதல் போக்கு தீவிரமடைந்தது. குறிப்பாக அடுத்த மாதம் (பிப்., 7 முதல்) இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற உள்ள டி-20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட் டோம் என வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தி டம் (ஐசிசி) தெரிவித்தது. ஐசிசியும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்கதேசத்தை நீக்கி, ஸ்காட் லாந்து அணியை சேர்த்துள்ளது. ரூ. 325 கோடி இந்நிலையில், வங்கதேச அணி உலகக்கோப்பை விளையாட இந்தியா வர மறுத்ததால், அந்நாட்டுக்கு சுமார் 240 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது வங்கதேச பண மதிப்பில் சுமார் ரூ. 325 கோடி ஆகும். மேலும் ஐசிசி மூலம் ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் வருவாய் பங்கீட்டில் வங்கதேசத்திற்கு கிடைக்க வேண்டிய தொகை நிறுத்தப்படலாம். இது அந்த நாட்டு கிரிக்கெட் நிர்வா கத்தையே முடக்கிவிடும் அபாயம் உள்ளது. இதுபோக ஐசிசி வருவாய் மட்டுமின்றி, தொலைக்காட்சி ஒளி பரப்பு உரிமம் மற்றும் விளம்பர தாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் சுமார் 60% வரை இழப்பு ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?