டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு?

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு?


 

இஸ்லாமாபாத்: அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.


இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 55 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தங்கள் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுகின்ற காரணத்தால் தங்களுக்கான ஆட்டங்களை இலங்கையில் நடத்த வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஐசிசி-யிடம் முறையிட்டது.


இந்த குற்றச்சாட்டை ஐசிசி மறுத்தது. தொடர்ந்து வங்கதேசத்தின் கோரிக்கை குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அந்த அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் நின்றது. இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வங்கதேசத்துக்கு ஐசிசி கெடு விதித்தது. இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்த காரணத்தால் அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி இந்த தொடரில் விளையாடும் என ஐசிசி தெரிவித்தது.


இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவை தங்கள் நாட்டின் அரசே முடிவு செய்யும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி அண்மையில் தெரிவித்தார். இப்படி வங்​கதேசத்​துக்கு ஆதரவாக உலகக் கோப்​பை​யில் பங்​கேற்​பது குறித்து சந்​தேகத்தை கிளப்பி அச்​சுறுத்​தல் விடுத்த பாகிஸ்​தானுக்கு ஐசிசி கடும் எச்​சரிக்கையை அனுப்​பி​யிருந்​தது.


இவ்​வாறு செய்​தால் கிரிக்​கெட் உலகி​லிருந்து பாகிஸ்​தான் முழுமை​யாக தனிமைப்​படுத்​தப்​படும் என்​றும் ஐசிசி எச்சரிக்கை விடுத்​தது. இதையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் தங்கள் அணி வீரர்களை பாகிஸ்தான் அறிவித்தது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%