news Breaking News
clock

டெல்லிக்கு பழனிசாமி துணைபோவதா?-ஸ்டாலின்

டெல்லிக்கு பழனிசாமி  துணைபோவதா?-ஸ்டாலின்


சென்னை, ஜூலை 12-

தமிழகத்தை தண்டிக்கும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையில் தமிழகம் பக்கம் நிற்காமல் பழனிசாமி டெல்லிக்கு துணை போகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

உலக மக்கள் தொகை நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழகம் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது. பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது. ஆனால், பதிலுக்கு நமக்குக் கிடைப்பது என்ன?

குறைவான மக்களவைத் தொகுதிகள். குறைவான நிதி ஒதுக்கீடு. நாடாளுமன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல். ஏன்? ஏனென்றால், தமிழகம் சரியானதைச் செய்தது. அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது.

இதைவிட மோசம் என்ன என்றால், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் அவரது கட்சி தமிழகத்தின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார்கள். நாம் எட்டிய வளர்ச்சிக்காக நம்மைத் தண்டிக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறார்கள். தெளிவாகச் சொல்கிறேன். தமிழகம் உங்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஒருமித்து எழுவோம். இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி. 

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News