news Breaking News
clock

தமிழில் அர்ச்சனை புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார்

தமிழில் அர்ச்சனை புரட்சியை   முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார்


சென்னை, ஜூலை 12-

 தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் என்று அவரது நூற்றாண்டு நிறைவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

 குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:

குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று. சமூகநீதித் தளத்தில், பெரியார், அண்ணா, கருணாநிதி என திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்.

சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தியே பாராட்டிய ‘குன்றக்குடிக் கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்.

பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் விருப்பத்தின் வழியே தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்.

தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-ஆவது மகாசந்நிதானம் தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க. அவரது வழியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News