தந்தை

தந்தை


தந்தையே தலைவர் ஆவார்

     தன்னையே உருக்கித் தேய்வார்

உந்துதல் விசையாய் மாறி

     உண்மையில் ஊட்டம் ஈவார் சொந்தமாய் உழைப்பை ஊற்றிச்

     சொர்க்கமாய் குடும்பம் ஆக்கிச்

சந்தமாய் இனிக்கும் நல்லார்

     சந்ததி போற்றும் வல்லார்

 (52)


அறிவினைக் கூட்டும் ஆசான்

     ஆற்றலைத் தீட்டும் நண்பன்

நெறிகளைக் கற்று வித்தே

     நெஞ்சினில் நிறையும் தோழன்

முறித்திடும் உறவா தந்தை?

     முழுமையை அறிவார் யாரோ?

குறித்திடும் சான்றாய் வாழ்ந்து

     குன்றினின் புகழாய் நிற்பார் (53)


வலிகளைத் தனக்குள் வைத்து

     வரங்களை நமக்குத் தந்து

சலித்திடும் வகையில் பேசாச்

     சத்திய சீலன் தந்தை

பொலிவுடன் இருப்பார் என்றும்

     போற்றுவோம் அவரை நன்றாய்

ஒலித்திடும் புகழால் நாளும்

     ஓதுவோம் தியாகம் தன்னை! 



*கவிஞர் மு.வா.பாலாஜி*

ஓசூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%