news Breaking News
clock

நிழலை தொலைத்த நிஜம்

நிழலை தொலைத்த நிஜம்



------


நினைவுகள் என்னும் நிஜம் இருக்க வேறு நிழல் எதற்கு? 


நினைவுகள் நீங்காமல் நெஞ்சில் நிலைக்கும்போது,

நிழற்படம் எதற்கு?

பார்க்க முடியுமா என ஏங்கிய காலங்கள் போய்,

பேசும் வாய்ப்பைத் தந்து இயற்கை நம்மை அரவணைக்கிறது!

நிஜங்களை மட்டும் நாம் நேசிக்கும் போது,

இயற்கை என்றும் நம்மோடு பயணிக்கும்!

அதைப் பதிவாக்கிப் பத்திரப்படுத்த முயலும்போதுதான்,

ஆசைகள் மெல்ல மேலோங்கிப் போகிறது! விலகியும் கூட போகிறது

கனவுகளோடு ஆவணங்களை சேர்த்து வைக்கும் அத்தனையும்,

கடைசி வரை நிலைக்கும் என்பது நிச்சயமில்லை!

ஆனால், கண்ணுக்குள் புதைத்து வைத்த நினைவுகளுக்கு,

மரணத்திற்குப் பின்னும் நினைவாக மிஞ்சும். அழிவில்லை!

சில பயணங்கள் நீளாமல் சுருங்குவதும் நன்மைக்கே!

சில விவாதங்கள் தொடராமல் முடிவதும் நன்மைக்கே!

அன்பான வார்த்தைகளும், அழகான புன்னகையும் போதும்,

புதைந்து போன பொக்கிஷங்களை அவை மீட்டுத்தரும்!

பறந்து செல்வதை விட, மெல்ல நடந்து செல்வதிலேயே

வாழ்க்கையின் அத்தனை சுகங்களும் ஒளிந்திருக்கின்றன...

அந்த நினைவுகளை அசைபோட்டபடி,

நம் பயணம் இன்பமாகத் தொடரட்டும்!


-----------

ஜனனி அந்தோணி ராஜ், திருச்சிராப்பள்ளி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News