______________________
உடலும் உள்ளமும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை!
உடல்நலம் பாதிக்கப்பட்டால் மன அமைதி குறையும் !
மன அழுத்தம் அதிகமானால் உடல் ஆரோக்கியம் கெடும் !
ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி அவசியம் !
மன பயிற்சியும் மனிதனுக்கு முக்கியம்!
சத்தான உணவே உடலுக்கு பலம் மனதிற்கு அமைதி !
ஆழ்ந்த உறக்கம் மூளையைப் புதுப்பித்து பதட்டத்தை குறைக்கும்!
ஆழ்ந்த மூச்சு விடுவது ரத்த ஓட்டத்தையும் மனநிலையும் சீராக்கும்!
பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மன அழுத்தத்தை விரட்டும்!
உடல் ஒரு ஆலயம் உள்ளம் அதன் தெய்வம் !
சுத்தம் பேணினால் வாழ்வு என்றும் சொர்க்கம் !
உழைப்பு உடலுக்கு உறுதி அன்பு உள்ளத்திற்கு அமைதி !
உடலும் உள்ளமும் இணைந்தால் என்று மகிழ்ச்சி !
உடல் ஒரு கருவி உள்ளம் அதன் பாட்டு
கருவி சீரானால் இசை தானாக கேட்கும் !
வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் உள்ளம்போல் !
துடிக்கும் இதயம் அன்பால் நிறைந்தால் உடலும் பிணி இன்றி வாழும் !
அமைதியான உறக்கம் ஆயுள் விருந்து!
எண்ணம் தூய்மையானால் ஆரோக்கியம் தானாக நிலைக்கும் !
மனதில் பாரம் குறைந்தால் உடலில் வேகம் பிறக்கும்!
உடல் தூய்மை , உள்ளத் தூய்மை மனத்தூய்மை வாழ்க வளமுடன்!
பெ.திருமுகம்.
மணமேல்குடி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?