" உன் மெளன மொழி
வாடிய விழி
உடைந்த உன்
உள்ளம் வெடித்து
காய்ந்த உன்
இதழ்கள் ....."
என்னுடன் நீ
போடும் சண்டை
சீண்டல் மொழி
உச்சம் பெற்று
ஆட்சி பெற்றால்
அது தீண்டல்
மொழி ...."
உன் காந்த
விழியும் காதல்
ரசம் பொங்கும்
ஈர்ப்பு மொழியும்
என்னை சாய்த்து
விடும் ..."
அதையும் கடந்து
நின்றால் உன்
புன்னகையும்
சிரிப்பொலியும்
கவிழ்த்து விடுமே ..."
அடித்தாலும் நீ தான்
அனைத்தாலும்
நீ தான்
இரவுக்குள்
நுழையும் போது
சர்க்கரையும்
எறும்பும் போல ..."
கொதிக்கும் உன்
தேகம் துடிக்கும்
உன் இமைகள்
நடுக்கும் உன்
விரல்கள்
தவிக்கும் உன்
கால்கள் .... "
என் உறவைத்
தாண்டிய உன்
பிறந்த வீட்டு
உறவு உன்
நிழல் நாடியது
காரணமா ....."
அந்த நிழலில்
மகிழ்ந்த நாட்கள்
நினைவில் அலை
மோதுகிறதா
மௌனம் விலக
வாய் திற
மாற்று மருந்தே ....."
- சீர்காழி .ஆர். சீதாராமன்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?