விழுப்புரம், பிப்.
- விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே, தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க வந்த ராணுவ வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானூர் வட்டம் பேராவூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (44), இந்திய ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தார். இவரது தந்தை கிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் காலமானார். அவரது ஈமச்சடங்கு காரியங்களுக்காக அர்ஜூனன் ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை, பிப். 14) அதிகாலை 2:45 மணியளவில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரைத் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து அர்ஜூனனின் மனைவி தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், கிளியனூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?