news Breaking News
clock

சமையல் மற்றும் சோப்பு தயாரிப்புப் பயிற்சி

சமையல் மற்றும் சோப்பு தயாரிப்புப் பயிற்சி



சென்னை, பிப்.

- தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், எளிதாகச் சமைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் சோப்பு தயாரித்தல் குறித்த சிறப்புப் பயிற்சிகள் நடைபெற வுள்ளன. இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளதாவது: வரும் வியா ழக்கிழமை (பிப். 19) அன்று சமையல் பயிற்சி நடைபெறுகிறது. இதில் ரவா இட்லி மிக்ஸ், அடை, வடை மற்றும் பாயசம் ஆகிய வற்றை உடனடியாகச் சமை ப்பதற்கான வழிமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்க ப்படும். மேலும், இந்திய வகை அசைவக் குழம்பு களுக்கான மணமூட்டும் மசாலா பொடிகள் தயாரிப் பது குறித்தும் விளக்கப் ப்படும். இதனைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (பிப். 20) அன்று சோப்பு தயாரிப்பதற்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் மூலிகைகள், மலர்கள் மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சோப்புகளைத் தயாரிப்பது குறித்து நேரடிச் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இந்த இரண்டு பயிற்சி களும் கிண்டி, திரு. வி. க. தொழிற்பேட்டையில் உள்ள அக்ரோ டெக் கிரீன் பார்க் வளாகத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள பயிற்சி மைய த்தில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு 044-29530048 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News