இலவசப் பட்டா வழங்குவதில் பிரச்சினை: சார் ஆட்சியர் விசாரணை

இலவசப் பட்டா வழங்குவதில் பிரச்சினை: சார் ஆட்சியர் விசாரணை


விழுப்புரம், பிப்.

- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே டி.பாஞ் சாலம் கிராமத்தில் இலவசப் பட்டா வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைச் சார் ஆட்சியர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்குச் சொந்த மான தீர்த்தக் குளத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த வீடுகள் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன. இதில் வீடு இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் திண்டி வனம் அருகே டி.பாஞ்சாலம் கிராமத்தில் பட்டா தருவ தாக வருவாய்த் துறையினர் உறுதியளித்தனர். சனிக்கிழமை (பிப். 14) காலை சுமார் 10 மணியளவில், திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தலை மையில் வருவாய்த் துறையினர், டி.பாஞ்சாலம் கிராமத் திற்குப் பட்டா வழங்குவதற்கான இடத்தையை ஆய்வு செய்யச் சென்றனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதி மக்களுக்கு முதலில் பட்டா வழங்கு ங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதே போன்று கடந்த மாதம் 31-ம் தேதி அளவீடு செய்யச் சென்ற அதிகாரி களிடமும் வாக்குவாதம் செய்தனர். ரோஷணை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராசன் இரு தரப்பினரையும் சமா தானம் செய்து வைத்தார். இது குறித்துத் தகவல் அறிந்த சார் ஆட்சியர் ஆகாஷ், மதியம் சுமார் 11.45 மணிக்கு நேரில் சென்று பட்டா வழங்க உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, இடத்தை அளவீடு செய்து, டி.பாஞ்சாலம் மற்றும் தீர்த்தகுளம் பகுதி மக்களுக்குப் பட்டா வழங்குவதற்கு உடனடியாக நட வடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தர விட்டார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%