சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பேராசிரியர் கா.ராஜன் மற்றும் முனைவர் இரா.சிவானந்தம் ஆகியோர் எழுதிய “தமிழ்நாட்டின் பாறை ஓவியங்கள் - Rock Art of TamilNadu” என்ற நூலினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டில் அமைந்துள்ள 46 பாறை ஓவியத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆவணப்படுத்த லின் விளைவாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, தொல்லியலாளர்கள், நாட்டுப்புறவியலாளர்கள், மானுடவியலாளர்கள், நிலவியலாளர்கள், கலை வரலாற் றாசிரியர்கள் மற்றும் தொல்பழங்கால சூழலியலாளர்கள் ஆகிய பல்துறை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினால் மேற் கொள்ளப்பட்டது. குழுவினர்கள் சேகரித்த தகவல்களும், விளக்கங்களும் ஒருங்கிணைந்த அறிவுசார் படைப்பாக இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களின் பண்பாட்டுச் சிறப்பை மதிப்பாய்வு செய்வதற்கு உதவும் வகையில், இந்நூலில் நிழற்படங்கள், வரைபடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, கடந்தகால மக்களின் சமூக வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு, அவர்களின் உள்ளுணர்வு, சிந்தனைத் திறன் ஆகியவற்றை வெளிப் படுத்துகின்றன. பாறை மேற்பரப்புகளில் வரையப்பட்ட இக்காட்சிகள், கலை மீது கொண்டிருந்த அவர்களின் மதிப்பையும், சமூக ஒற்றுமையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இந்நூல் மொத்தம் 734 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 92 நிலப்படங்கள், 682 வண்ண நிழற்படங்கள் மற்றும் 528 கோட்டுருவ வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?