news Breaking News
clock

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி பிப். 24 முதல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம்!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி பிப். 24 முதல் சென்னையில் காத்திருப்புப் போராட்டம்!



சென்னை, பிப். 

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி யமைக்க வேண்டும், அரசு சார்பில் ஆட்டோ செயலியை (App) உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் பிப்ரவரி 24 அன்று தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் போக்கு வரத்து ஆணையர் அலுவலகம் முன்பு மூன்று நாட்களுக்குத் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போராட்டத்திற்கான ஆயத்தக் கூட்டம் ஞாயிறன்று (பிப். 15) கிண்டி அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் ஜே. முகமது அனிபா தலைமையில் நடை பெற்றது. இதில் சம்மேளன பொதுச் செயலாளர் எம். சிவாஜி, சிஐடியு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வா கிகள் பங்கேற்றனர். சென்னையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், வாழ்வாதார உரிமைகளுக்காக நடத்தப்படும் இப்போராட்டத்திற்குப் பொதுமக்கள் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் எம். சிவாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News