ஆதிதிராவிடர் நல நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்படவில்லை வதந்திகளுக்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி!
Feb 17 2026
40
சென்னை, பிப்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) திட்டத்திற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி பயன் படுத்தப்பட்டதாகச் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் உண் மைக்குப் புறம்பானவை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒருபோதும் வேறு திட்டங்களுக்கு மாற்றப்படுவதில்லை. பட்ஜெட் நடை முறைப்படி ஒவ்வொரு திட்டத்திற்கும் பொது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் எனத் தனித்தனி கணக்குத் தலைப்பு கள் உள்ளன. அந்தந்த சமூகப் பயனாளி களுக்கான நிதி அவர்களுக்கு மட்டுமே சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப் படும் கூடுதல் நிதியானது, அதற்கென ஒதுக்கப்பட்டத் தனி நிதியிலிருந்தே வழங்கப்படுகிறது. மேலும், இந்த நிதியைப் பாதுகாக்கத் தமிழக அரசு இயற்றியுள்ள தனிச் சட்டத் தின்படி, குறிப்பிட்ட நிதியாண்டில் பயன்படுத்தப்படாத நிதி பொது நிதியாக மாறாது; அது அடுத்த ஆண்டிற்கு அதே நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும். எனவே, நிதி மாற்றம் குறித்த குற்றச் சாட்டு ஆதாரமற்றது” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?