தமிழ் நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.
Sep 19 2025
41

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு கூட்டம்19.9.25 காலை10.30 மணிக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடை பெற்றது. வரவேற்புரை ரகுபதி மாவட்டத் துணைத் தலைவர்.
இரங்கல் தீர்மானம் மாவட்ட இணை செயலாளர் மாணிக்கம்.
கடந்த கால நிகழ்வுகள் செயலாளர் பச்சையப்பன் விளக்கி பேசினார். மாநில செயற்குழு முடிவுகளை பஞ்சமூர்த்தி விவரித்தார். மாவட்ட மாநாடு போளூரில் 28.9.25 நடத்துவது, 7.10.25 சிவகாசியில் 5 வது மாநில மாநாடு சிறப்பாக கலந்து கொள்வது சம்பந்தமாக ஆலோசனை கருத்துக்களை வந்தவாசி தலைவர் பால்ராஜ், சேத்துப்பட்டு தலைவர் குழந்தைவேலு, கீழ்பெண்ணாத்தூர் பஞ்சமூர்த்தி, கலசப்பாக்கம் ஜெயக்குமார், போளூர் அபிபுல்லாகான், ஆரணி அமிர்திலிங்கம், வெம்பாக்கம் மாணிக்கம், தண்டராம்பட்டு ஜெயராமன், செங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
மாநில செயலாளர்சி. சுப்பிரமணியன் மாநாடு, மாநில சங்க நடவடிக்கைகளை விளக்கி பேசினார். பொருளாளர் ஆனந்தன் நிதிநிலை பற்றி தெரிவித்தார். நன்றி உரை மாவட்ட இணை செயலாளர் ராஜகோபால்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?