தீவிர காய்ச்சலுடன் விளையாடி கோப்பையை வென்ற ஸ்மிருதி மந்தனா

தீவிர காய்ச்சலுடன் விளையாடி கோப்பையை வென்ற ஸ்மிருதி மந்தனா


 

பெங்களூரு,


5 அணிகள் பங்கேற்ற 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல். டி20 ) கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் மகளிர் அணி மோதின.


டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி உயர்ந்த இலக்கை நிர்ணயித்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்கம் முதலே தாக்குதலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராதா யாதவ் மற்றும் நாடின் டி கிளார்க் ஜோடி பொறுப்புடன் விளையாடி 4 பந்துகளில் இலக்கை எட்டியது. இதன் மூலம் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.


இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு, ஸ்மிருதிக்கு 103 டிகிரி பாரன்ஹீட் காய்ச்சல் இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் தெரிவித்தார்.


கடுமையான காய்ச்சல் பாதிப்பு இருந்தபோதிலும், அணியின் வெற்றிக்காக விளையாடிய அவருக்கு ரசிகர்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

------------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%