ஈரானைச் சேர்ந்த சோரயா ஆகாயி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகத் தேர்வு

ஈரானைச் சேர்ந்த சோரயா ஆகாயி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகத் தேர்வு



ஈரான் நாட்டின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை யாக இருப்பவர் சோரயா ஆகாயி. அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். இந்நிலையில், இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற்று வரும் 145ஆவது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) அமர்வில் சோரயா ஆகாயி, உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 95-2 என்ற வாக்கு கள் அடிப்படையில் அவர் ஐஓசி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட் டார். இதன்மூலம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் ஈரானிய பெண் உறுப்பினர் என்ற சிறப்பை சோரயா ஆகாயி பெற்றுள்ளார். வரலாற்றுச் சாதனை 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பி னராகத் தேர்வாகும் முதல் ஈரானி யர் சோரயா ஆகாயி ஆவார். குறிப்பாக ஈரானில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பிரதிநிதிகளில் சோரயா தான், முதல் பெண்மணி என்பது சாதனைக்கு உரிய அம்ச மாகும். குறிப்பாக 30 வயதான சோரயா, தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி யின் மிக இளம் உறுப்பினர் என்ற கூடுதல் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். 45% பெண்கள் 132 ஆண்டுகால ஒலிம்பிக் வர லாற்றில் முதல் பெண் தலைவரான கிர்ஸ்டி கோவென்ட்ரி (ஜிம்பாப்வே) தலைமையில் தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயல்பட்டு வரு கிறது. தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்களில் 45% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த சோரயா? 2021இல் நடைபெற்ற டோக்கியோ (ஜப்பான்) கோடைகால ஒலிம்பிக் தொடரில் ஈரான் சார்பாக பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற முதல் பெண் ஒலிம்பி யன் சோரயா ஆகாயி ஆவார். இவர் தற்போது ஈரானிய ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணையத்தில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது. சோரயா ஆகாயி மட்டு மின்றி, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஈரானிய பேட்மிண்டன் வீரர் காவே மெஹ்ராபி, தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடகளத் துறை யின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 


ஈரான் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் ஈரான் நாட்டில் பழமைவாத கட்டுப்பாடு அதிகம் உள்ளது. அதாவது பெண்களுக்கு ஹிஜாப் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இத்தகைய சூழலில், ஈரானைச் சேர்ந்த பெண் சோரயா ஆகாயி வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகத் தேர்வு செய்யபட்டுள்ளது விளையாட்டில் ஈரான் பெண்களுக்கு ஊக்கம் மற்றும் அதிகாரமளிக்கும் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%