கிருஷ்ணகிரி, பிப்.
- வேப்பனப்பள்ளி அருகே அரசு நகரப் பேருந்தை மறித்து, சாலையின் நடுவே கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யானைக்கால்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (28) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து, நாச்சிகுப்பம் பிரிவு சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து மேளதாளங்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ஈஸ்வரராவ் என்பவரை அவர்கள் தாக்கியுள்ளனர். புகாரின் பேரில் வேப்ப னப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து, தலை மறைவாக உள்ளவர்களைத் தேடி வருகின்றனர். ஓசூரில் கால்நடைகளுக்கு புதிய கோசாலை ஓசூர், பிப். 5- ஓசூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை நிலைப் படுத்துவதற்காக 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கோசாலை அமைக்கப்படும் எனப் பொது சுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குழுத் தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆணையர் முகமது சபீர் ஆலம் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், முனீஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?