news Breaking News
clock

துப்பாக்கியை காட்டி மிரட்டிய கடலூர் அதிமுக பிரமுகர் கைது

துப்பாக்கியை காட்டி மிரட்டிய கடலூர் அதிமுக பிரமுகர் கைது



கடலூர், ஜன.

- கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு குழந்தை குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் அதிமுகவில் மேற்கு ஒன்றிய விவசாய அணி துணை செயலாளராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் என்பவருக்கும் செம்மண் கிராவல் குவாரியில் தொழில் ரீதியாக இரு வருக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் புதன்கிழமை கிருஷ்ணமூர்த்திக்கும் வினோத் இருவருக்கும் இடையே குவாரியில் வாக்குவாதம் ஏற்பட்டது. கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக உள்ளார். தான் அனுமதி பெற்று வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து வினோத் என்பவரை மிரட்டி தாக்கியது சம்பந்தமாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கோபால் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கோபாலை கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News