news Breaking News
clock

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழதைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழதைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை



சென்னை, ஜன.

- ‘பிரைமரி ஆக்சலூரியா’ எனும் அரிய வகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுவனுக்கு, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஎம் மலர் மருத்துவமனை வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது. இந்த நோயால் சிறுவனின் கல்லீரல் நச்சுப்பொருளை வெளியேற்றத் தவறியதால், அவனது சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டான். டாக்டர் அனில் வைத்யா தலைமையிலான மருத்துவக் குழு, சிறுவனின் பாட்டி தானமாக வழங்கிய கல்லீரலைக் கொண்டு இந்தச் சிக்கலான சிகிச்சையை மேற்கொண்டது. கல்லீரல் சீரானதால், தற்போது சிறுவன் டயாலிசிஸ் தேவைப்படாத நிலைக்கு முன்னேறியுள்ளான். எதிர்காலத்தில் அவனுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த எடை கொண்ட குழந்தைக்கு இச்சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News