news Breaking News
clock

இணையத் தயார் : ஓ.பி.எஸ்; சேர்க்க முடியாது : இபிஎஸ்!

இணையத் தயார் : ஓ.பி.எஸ்; சேர்க்க முடியாது : இபிஎஸ்!



தேனி, ஜன. 

- அதிமுகவில் இணைவதற்கு நாங்கள் தயார்... எங்களை இணைப்பதற்கு டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா? என்று முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், பெரியகுளம் பண்ணை வீட்டில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். “டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுக வெற்றிபெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத் தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய முடியும். தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதிலளித்துள்ளார். அதில், “ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவது என்பது பொதுக்குழு கூடி முடிவெடுத்தது. ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். பொதுக்குழுவில் எடுத்த முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது. எனவே, அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை!” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News