உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக் கோரி பிப்.9 முதல் சென்னையில் போராட்டம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக் கோரி பிப்.9 முதல் சென்னையில் போராட்டம்



இராஜபாளையம், ஜன.

- தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூ திய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்கக் கோரி, வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சென்னையில் மாநில அளவிலான போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என தமிழ் நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் அறிவித் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராமசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சி களில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், 2018ஆம் ஆண்டு முதல் காலமுறை ஊதிய மாக ரூ.15,900 – 50,400 வரை (சி கிரேடு) ஊதியம் பெற்று வருகின்றனர். முழுநேர பணி யாளர்களான ஊராட்சி செயலாளர்களுக்கு, பணி ஓய்வு பெறும் போது தற்போது மாதம் ரூ. 2,000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணை க்க வலியுறுத்தி, சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போராட் டத்தில் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அரசால் ஊராட்சி செயலாளர்களின் ஊதியத்திலிருந்து சுமார் ரூ.6 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டது. பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் துறை ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், 19 நாட்களுக்கு மேலா கியும் இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட வில்லை. இந்நிலையில், முதல்வர் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பில், பகுதிநேர பணியா ளர்களுடன் இணைத்து ரூ.3,400 ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊராட்சி செயலா ளர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும் சூழலை உருவாக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, ஒத்திவைக்கப்பட்ட போராட்டத்தை மீண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சென்னை யில் மாநில அளவில் தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று மாநில துணைத்தலைவர் ராமசுப்பு தெரி வித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%