news Breaking News
clock

ரேசன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக தமிழக கேரள அதிகாரிகள் ஆலோசனை

ரேசன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக தமிழக கேரள அதிகாரிகள் ஆலோசனை



தேனி, ஜன.

- தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவதை தடுக்கும் பொருட்டு, கம்பத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. தமிழகத்தின் எல்லை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத் தும் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர், குடிமைப் பொருள் வழங் கல் சி.ஐ.டி அதிகாரிகள் மற்றும் கேரள மாநில குடிமைப் பொருள் வழங்கல் அதி காரிகள் ஆகியோருக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி நல் லையா தலைமை தாங்கினார். கூட்டத்தில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில எல்லை பகுதிகளி லும் உள்ள சோதனைச் சாவடிகளை பலப் படுத்துதல், தமிழக எல்லை சோதனை சாவ டியில் சோதனையை தீவிரப்படுத்தவும், தொலைபேசி எண்கள், சந்தேகப்படும் வாகனங்கள் மற்றும் நபர்கள் உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுதல், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கூட்டாக சோதனை நடத்தும் போது ஒரு வருக்கொருவர் உதவி செய்தல், தலை மறைவான குற்றவாளிகளை கைது செய்ய வும், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பிடி யாணை நிறைவேற்றவும், ரேசன் அரிசி போன்றவற்றை பெறுபவர்களில் பெரும் பாலானோர் கேரள மாநில எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, ரேசன் அரிசி வாங்குபவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து, அவர் களை கைது செய்ய தமிழ்நாடு காவல் துறைக்கு உதவ கேரளா அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பது குறித்தும் விவா திக்கப்பட்டது கூட்டத்தில் கம்பம் மெட்டு இன்ஸ்பெக் டர் ரமேஷ், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் லதா, தாலுகா வட்ட வழங்க அலுவலர்கள் மோகன் முனியாண்டி உத்தமபாளையம், ராமராஜ் பெரியகுளம், இந்திரா தேனி, காசிநாதன் ஆண்டிபட்டி, பீருமேடு ரெஜி தாமஸ், உடும்பன்சோலை ராய் தாமஸ், பீர்மேடு கணேசன் உட்பட தமிழக, கேரள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News