news Breaking News
clock

நீதிமன்ற உத்தரவுப் படி பாலக்கோம்பை கிராமத்திற்கு அடிப்படை வசதி

நீதிமன்ற உத்தரவுப் படி பாலக்கோம்பை கிராமத்திற்கு அடிப்படை வசதி



தேனி, ஜன.


- தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுப்படி ஆண்டிப் பட்டி ஒன்றியம் பாலக்கோம்பை கிராமத்தில் அடிப்படை வசதி மேற்கொள்ளப்பட்டது. ஆண்டிபட்டி வட்டம், பாலக்கோம்பை வடக்கு தெரு வில் வசித்து வரும் அழகர் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்களது பகுதியில் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்ப தால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும், மேலும் கொசு தொல்லை அதிகரிப்ப தாலும், கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக் கோரி கடந்த அக்டோபர் மாதம் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவினை பரிசீலனை செய்த நீதிபதி ஏ.கே.கே ரஜினி, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) உள்ளிட்ட அலுவலர்களை நேரில் விசாரணை செய்து, உரிய கால அவகாசத்தில் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பாலக்கோம்பை பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் அமைத்து தரப்பட்டுள்ள அறிக்கையினை வியாழனன்று சம்பந்தப்பட்ட அலு வலர்கள் நிரந்தர மக்கள் மாவட்ட நீதிபதி ஏ.கே.கே.ரஜினி யிடம் வழங்கினர். மது விற்பனை: 2 பேர் கைது தேனி, ஜன.29- தேனி, கம்பத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர் களிடமிருந்து 56 மதுபாட்டில்களை பறிமுதல்செய்தனர். பூதிப்புரம் பொதுக் கழிப்பிடம் அருகே உள்ள முட்புத ரில் வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த சின்ன பாலு மகன் கோவிந்தன் (44) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். ரோந்து சென்ற மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கே.எஸ்.ராஜா அவரை கைது செய்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதுபோல கம்பம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முரு கன் மகன் ராமகிருஷ்ணன் (46) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த பாளையம் மதுவிலக்கு காவல்நிலைய தலைமை காவலர் சிவகுமார், அவரிடமிருந்து 30 பாட்டில்களை பறி முதல் செய்தனர். மினிவேன் மோதி 2 பேர் படுகாயம் நத்தம், ஜன.29- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வர் சதீஸ்குமார்(23). இவர் வியாழனன்று தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளைச்சாமி என்பவருடன் மேற்கிப்பட் டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தார். மணக்காட்டூர் அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதி யில் சென்று கொண்டிருந்த போது எதிரே கோசுகுறிச்சி- கம்பிளியம்பட்டியை சேர்ந்த விஜய்(20) என்பவர் ஓட்டி வந்த மினிவேன் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார், வெள்ளைச்சாமி ஆகிய இரு வரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கார் மோதி ஒருவர் படுகாயம் நத்தம், ஜன.29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி யைச் சேர்ந்தவர் திரவியம்(57) தொழிலாளி. இவர் கடந்த 27 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை- துவ ரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். வேம்பரளி பிரிவு பகுதியில் பின்னால் சென்னை- குரோம்பேட்டையை சேர்ந்த அனிருத்(35) என்பவர் ஓட்டி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த திரவி யத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News