தேனியில் ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

தேனியில் ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்



தேனி, பிப்.

- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 420 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ரூ.14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொழிலாளர் துறையின் சார்பில், மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்குவதற்கு மானியமாக ரூ.40,000மும், பணியிடத்து விபத்து மரண உதவித் தொகையாக 4 நபர் களுக்கு ரூ.10,00,000 உதவித்தொகையும், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 25 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.3,62,250 மதிப்பிலான பிரத்யேக ஸ்மார்ட் போன்களையும் என மொத்தம் 31 பயனாளிகளுக்கு ரூ.14,02,250 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பஞ்சாபிகேசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%