தொடர் மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தொடர் மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

டிட்வா புயல் காரணமாக கடந்த 1ஆம் தேதி முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. இடைவிடாது மழை பெய்வதால் சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட குறைந்து காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கருமேகங்கள் சூழ்ந்து ஊட்டியில் இருப்பது போல் காட்சி அளிக்கிறது. பெரும்பாலன மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பழக்கடைகள் உள்ளிட்ட சாலையோரம் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடந்த 8 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%