திருவண்ணாமலை தீப விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை தீப விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 திருவண்ணாமலை புதனன்று (டிச.3) கார்த்திகை தீப விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தீப விழாவின்போது பொதுமக்களின் நலனுக்காக இந்து சமய அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், உள்ளூர் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்குச் செல்ல போதுமான வழி வசதி இல்லாமல் அல்லல் பட்டனர். திருவண்ணாமலைக்கு வந்த வெளியூர் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கழிவறைகளில் பல இடங்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தி இருந்தாலும், அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெளியில் செல்வதற்கு போதிய வழியில்லாத நிலை ஏற்பட்டது. வெளியூர்களிலிருந்து பாதுகாப்பு பணிகளுக்காக வந்திருந்த காவல்துறையினருக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யாததால் காவல்துறையினர் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றப்பட்டது. தீபவிழாவிற்கு வருகை தந்த லட்சக்கணக்கான மக்கள் மலையைச் சுற்றி வந்து வழிபாடு செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%