news Breaking News
clock

தொலைந்து போன தங்கச் சங்கிலி 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை!

தொலைந்து போன தங்கச் சங்கிலி 3 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை!



நாமக்கல், பிப்.

பள்ளிபாளையம் அருகே தவறவிட்ட 3 பவுன் தங்கச் சங் கிலியை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மூன்றே மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஒட்ட மெத்தை பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. கூலித் தொழிலா ளியான இவர், தனது குடும்பத் தேவைக்காக 3 பவுன் தங்கச் சங்கிலியை தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்திருந்தார். இந்நிலையில், செவ்வாயன்று வங்கியில் பணத்தைச் செலுத்தி நகையை மீட்ட மல்லிகா, அதனைத் தனது பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள் ளார். அவர் கொண்டு சென்ற பை எதிர்பாராதவிதமாக கிழிந்தி ருந்த நிலையில், அதனை கவனிக்காமல் சென்றதால் வழியி லேயே தங்கச் சங்கிலி கீழே விழுந்துள்ளது. வீட்டிற்குச் சென்ற பிறகு பையைப் பார்த்த மல்லிகா, நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் கௌதம் தலைமையிலான போலீசார், மல்லிகா நடந்து வந்த பாதையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை அவ்வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் எடுத்துச் செல்வது சிசிடிவி காட்சியில் பதி வாகியிருந்தது. அதன் அடிப்படையில் அந்த இளைஞரை அடையாளம் கண்ட போலீசார், அவரிடமிருந்து தங்கச் சங் கிலியை பத்திரமாக மீட்டனர். புகார் அளித்த மூன்றே மணி நேரத்திற்குள் நகையை மீட்ட போலீசார், மல்லிகாவை நேரில் வரவழைத்து நகையை ஒப்படைத்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News