கவிஞர் இரா .இரவி !
சாதிக்க முடியுமா ? சந்தேகம் வேண்டாம் !
சாதிக்க முடியும் ! நம்பிக்கை வேண்டும் !
உயர முடியுமா ? சந்தேகம் வேண்டாம் !
உயர முடியும் !உத்வேகம் வேண்டும் !
வெல்ல முடியுமா ? சந்தேகம் வேண்டாம் !
வெல்ல முடியும் ! வெறி வேண்டும் !
எதிர்மறை சிந்தனை உனக்கு வேண்டாம் !
நேர்மறை சிந்தனை உனக்கு வேண்டும் !
தாழ்வு மனப்பானமையைத் தகர்த்திட வேண்டும் !
தன்னம்பிக்கை நெஞ்சில் நிறுத்திட வேண்டும் !
தோல்வி பயத்தைத் தள்ளி வைக்கும் வேளை
தோள்களில் விழும் வெற்றி மாலை !
முயன்றால் எதுவும் முடியும் முயன்றிடு !
முயற்சி திருவினையாக்கும் வள்ளுவர் கூற்று !
நேரத்தை மதித்து திட்டமிட்டு உழைத்திடு !
நினைத்து எல்லாம் நடந்திடும் கண்கூடு !
அக்கினிச் சிறகுகள் எழுதினார் அப்துல்கலாம் !
நம்பிக்கைச்சிறகால் எழுதிடு உன் சாதனை வரலாறு !
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?