நாகப்பட்டினம் ஜெ.ஜெயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்கவிழா

நாகப்பட்டினம் ஜெ.ஜெயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்கவிழா 23:08:2025 இன்று நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் திருமதி R. ஹேன்னா பாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர் (ஓய்வு)
திரு A. T. அன்பழகன் உணவு சார்ந்த நுகர்வோர் விழிப்புணர்வு குறித்தான உரையாற்றினார்.
நாகை டிஸ்ட்ரிக்ட் கன்சுயூமர் அன்ட் புரடெக்க்ஷன் துணைத் தலைவர் திரு. V. பாலசுப்பிரமணியன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும்,
அமைப்பின் செயலர் திரு G. அரவிந்த் குமார் அவர்கள் நுகர்வோர் குறித்தான காட்சித் தொகுப்புகள் வழங்கி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நுகர்வோர் அமைப்பின் உறுப்பினர் திரு B. சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரிய பொறுப்பாளர்கள்
திருமதி. M. தென்றல், திரு M. மதன்ராஜ், திரு J. மணிகண்டன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
மாணவர்கள் நுகர்வு சார்ந்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி தங்கள் ஐயம் போக்கிக்கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?