நிலவு வந்த நேரத்திலே

நிலவு வந்த நேரத்திலே


புலர்தலில் தொடங்கிய

 உழைப்பின் நிறைவு


இரவல் வாங்கிய ஒளியை

இன்பமாய்ப் பிறர்க்கும் தரும்


*நிலவு வந்த நேரத்திலே* 

கவிதை ஊற்றெடுக்கும் 

கற்பனைச் சிறகு விரியும்


மொட்டை மாடியில்

கயிற்றுக் கட்டிலில்

உறவுகளோடு உண்ட

உணவின் ருசி

அமிர்தத்தை விஞ்சும்


விழியில் பட்ட காட்சி

இசையாகி செவியில் விழும்


நிலவுக்குள் தெரியும் உருவத்திற்கு

நித்தமும் ஒரு கதை 

நினைவில் தோன்றும் 


நீல் ஆம்ஸ்ட்ராங்கின்

 வெற்றி ரகசியம் புரியும் 


வளர்தலும் தேய்தலும் வாழ்வின்

 இயற்கை என்ற தத்துவம் புரியும் 


வெட்டிப்போட்ட நகமாய் 

குறுகிப் போகும்

வீறுகொண்ட நாகமாய்

முழுமை பெறும் 


நிலவு வந்த நேரத்திலே 

நினைவுகள் ரீங்காரமிடும்

நிஜத்தை மீட்டுத்தரும். 



தமிழ்நிலா

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%