மயிலாடுதுறை, அக்.24 - மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகர்வுப் பணிகள் நடைபெறு வதை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செய்தியாளர்களுடன் நேரில் சென்று, ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் தெரிவிக்கையில், “மயிலாடு துறை மாவட்டத்தில் நடப்பாண்டில் 39,640 ஹெக்டேரில் குறுவை பயிரிடப்பட்டு, இது வரை 39,549 ஹெக்டேரில் அறுவடை முடிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 91 ஹெக்டேரில் அறு வடைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 99.77 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 91 ஹெக்டேரிலிருந்து, சராசரியாக 13,486 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் எதிர்பார்க்கப் படுகிறது. காரீப் பருவம் 2025-2026-இல் 1.9.2025 முதல் 23.10.2025 வரை 144 எண்ணிக்கையி லான நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டு, 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1,01,672 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள 18,683 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப் பட்டு நகர்வு செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்கில், 2,379 மெட்ரிக் டன், மாணிக்கப் பங்கு பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் 3,194 மெட்ரிக் டன், எடமணல் பகுதி-2 சேமிப்புக் கிடங்கில் 2,948 மெட்ரிக் டன் என மொத்தம் 8,521 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வேளாண்மைத் துறையிட மிருந்து குத்தாலம் பகுதியில் உள்ள கிடங்கில் 2,869 மெ.டன் நெல்லும் மற்றும் திருச்சம் பள்ளியில் உள்ள கிடங்கில் 1,587 மெ.டன் நெல் மணிகள் எனக் கூடுதலாக 4,456 மெ.டன் நெல் மணிகள் இப்பருவத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இக்குறுவை பருவத்தில் கூடுதலாக கொள் முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை சேமிப்ப தற்காக மல்லியம் பகுதியில் சுமார் 3,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட தனியார் கிடங்கும், என்பிகேமுஆர்ஆர் சர்க்கரை ஆலையில் உள்ள சுமார் 10,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கில் தற்பொ ழுது வரை முறையே 2,171 மெ.டன் மற்றும் 5,500 மெ.டன் நெல் மணிகள் சேமிக்கப் பட்டும் உள்ளது. மேலும் மீதமுள்ள பகுதி களில் நெல் இறக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 24,688 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.303.84 கோடி அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ரூ.1.2 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.