news Breaking News
clock

ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி

ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி



 திருச்சிராப்பள்ளி, அக்.24 - ரயில் விபத்துகளின் போது, மீட்புக் குழுவினர் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்த, தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி, திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் வெள்ளி யன்று நடந்தது. இதற்காக ஒரு ஏசி மற்றும் 2 பொதுப் பெட்டிகள் என 3 ரயில் பெட்டிகள் கவிழ்க்கப்பட்டன. இதை விபத்தாகக் கருதி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு பொருட்கள், ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து குட்ஷெட் யார்டுக்கு கொண்டு வரப்பட்டது. திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி, திருச்சி கோட்ட பாதுகாப்பு பிரிவு முதுநிலை அலுவலர் ஸ்ரீதர் தலை மையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 50-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்து, உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்த துரித செயல்பாடுகளின் ஒத்திகை நடத்திக் காட்டப்பட்டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News