பணமே..பணமே

பணமே..பணமே


பணமே. பணமே.. ஓ பணமே.! நீ பையினில் இருந்தால் வரும் கணமே.!


கடையினில் பொருளை வாங்கணுமே.. அதற்கு கையினில் காசு இருக்கணுமே.!


கடவுளைப் பார்க்கவும் கொடுக்கணுமே.. அது கடைமடை வரையிலும் பாய்ந்திடுமே.!


ஆடை அணிகலன் வாங்கணுமே.. இங்கு அதற்கெல்லாம் பணமே இருக்கணுமே..


உழைப்பவன் கூலியாய் வந்த பணமே.. அதுவும் கால் வயிற்றையே நிரப்பணுமே.!


மாடி மனைகளும் வாங்கணுமே.. அந்த மண் குடிசைகளும் மாறணுமே..


ஏழைகள் இலவசமாய் படிக்கணுமே.. அந்த பள்ளியில் நுழையவே பண மிருக்கணுமே..


ஒவ்வொரு பணமாய் சேரக்கணுமே.. இநத உலகமே பணத்தின் பின் நடக்கும் தினமே..


பிணம் ஆனாலும் பணம் இருக்கணுமே.. அதை புதைக்கவும் எரிக்கவும் பணம் வேணுமே..!


பணமே.. பணமே.. ஓ.. பணமே..! பணத்துக்கு பின்னாலே ஓடும் உலகமே.?


பணம் இல்லையேல் அவன் பிணமே.. இது கிடைத்து விட்டால்.. அது சுப தினமே.!


வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%