news Breaking News
clock

உன்னால்... !

உன்னால்... !


கோர்வையாக தமிழ் வார்த்தைகள் எழுதத் தெரியாத என்னை...

கவிதை எழுத வைத்த பெருமை உன்னை சார்ந்தது !


பரட்டை தலையும் மழிக்காத தாடியுமாய் கண்ணாடியில் முகம் பார்க்காமல் திரிந்த என்னை ஒரு நாளுக்கு இரு முறை தாடியை சவரம் செய்து முடியை அடக்கி வைத்த பெருமை

உன்னுடையது !


அணியும் ஆடை எங்கே கிழிந்துள்ளது என்று கூட கவனிக்காமல் ஆடை அணிந்த என்னை பிறர் கவனிக்கும் வண்ணம் ஆடை அணிய வைத்த பெருமையும் உன்னுடையது..


எல்லா பெருமையும் உன்னைச் சார்ந்தது தான்....

இப்போதும்...

முன்பை போலவே திறிகிறேன்..... பரட்டை தலை, தாடி, கிழிந்த ஆடை...

வெற்று காகிதங்களில் ஏதேதோ கிறுக்கியபடி...

அன்பை நடித்து ஏமாற்றி

என்னை கிறுக்கனாக்கிய

பெருமையும் உன்னை சார்ந்ததுவே !

---------------------------

எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News