news Breaking News
clock

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய ‘சைமா’ கோரிக்கை

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய ‘சைமா’ கோரிக்கை



கோவை, ஜன.

- உள்நாட்டு ஜவுளித் தொழிலை பாது காக்கவும், கோடிக்கணக்கான தொழிலா ளர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வும் பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய பஞ் சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள் ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செய லாளர் செல்வராஜ் கூறுகையில், ஜவுளித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடிக் கும் இந்த 11 சதவீத இறக்குமதி வரி தொழில் துறையை மிகக் கடுமையாக பாதித்து வரு கிறது. கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் மட்டுமே பெரும் உற்பத்தி இழப்பும், வேலைவாய்ப்பு பறிபோ வதும் தவிர்க்கப்பட்டது. குறிப்பாக, கடந்த சீசனில் வரி விலக்கு இருந்ததால் 70 லட்சம் பேல் பருத்தி இறக்குமதி செய்யப்பட் டது; ஒருவேளை இந்த வரி நீக்கப்பட்டி ருக்காவிட்டால் இறக்குமதி 25 லட்சம் பேலாக குறைந்திருக்கும் என்றும், அதன் விளைவாக சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பார்கள். தற்போதைய நிலவரப்படி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கன மழையால் உள்நாட்டுப் பருத்தியின் தரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வழக்க மாக 75 சதவீதம் வரை கிடைக்கக்கூடிய உயர் தரப் பருத்தி, இந்த ஆண்டு 50 சதவீதத் திற்கும் குறைவாகவே கிடைப்பதாகப் பருத்தி ஆலோசனைக் குழு தெரிவிள் துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி உள் நாட்டுச் சந்தையில் வியாபாரிகள் பருத்தி விலையை ஒரு கண்டிக்கு 4,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர். சர்வதேசச் சந்தையில் பிரேசில் போன்ற நாடுகள் 15 சதவீதம் குறை வான விலைக்கு பருத்தியை வழங்கும் நிலையில், வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகள் அங்கிருந்து இறக்குமதி செய்து நமக்கு கடும் போட்டியை உரு வாக்குகின்றன. மார்ச் மாதத்துடன் பருத்தி சீசன் முடிவ டைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத் திற்குப் பிறகு சுமார் 50 லட்சம் பேல் பருத்தி பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படு கிறது. எனவே, ஜவுளி ஏற்றுமதியை மேம் படுத்தவும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்தியப் பொருட்களின் நிலையை உறுதிப்படுத்தவும் வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் இந்த 11 சதவீத இறக்கு மதி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News