உதகை, ஜன.
- நீலகிரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதற்காக ரூ.12 கோடியே 12 லட்சத்து 45 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் என்.எஸ்.நிஷா வெளியிட்டுள்ள அறிக் கையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு டிசம்பர் வரை பதிவு செய்யப்பட்ட வழக்குக ளில் 85 சதவிகிதம் கண்டுபிடிக்கப்பட்டு, சம் பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதி மன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள னர். கடந்தாண்டில் 209 சாலை விபத்து வழக்கு கள் பதிவாகியுள்ளன. சாலை விதிகளை மீறி யதற்காக 1 லட்சத்து 67 ஆயிரத்து 337 மோட் டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதில் 1,288 வழக்குகள் மது போதை யில் வாகனம் ஓட்டியதற்காகவும், 500 வழக்கு கள் அதிவேகமாக வாகனங்களை இயக்கிய தற்காகவும், 1,331 வழக்குகள் அபாயகர மாக வாகனம் ஓட்டியதற்காகவும் பதிவு செய் யப்பட்டு, ரூ.12.12 கோடி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?